Monday 23 December 2013

தனிமை

தனிமை

இது உன்னை என்னுடன் இணைக்கும் உபன்யாசம் 

நீ

எத்தனை....


எத்தனை அழகடி நீ

Friday 29 November 2013

உத்திரத்து தேவதை

ஓவ்வொரு முறை உன்னைப்பற்றி எழுதுகையில்
வீட்டு உத்திரத்தில் ஒரு தேவதை என்னை பார்த்து சிரித்துகொண்டே இருக்கிறது ...
எதற்காக சிரிக்கிறாய் என இதுவரை கேட்டதில்லை....
கேட்கபோவதும் இல்லை.(,,,,,பலமாக சிரிக்கிறது.........)  

Wednesday 20 November 2013

கனவு


எனது  வாழ்கை இரண்டாக உள்ளது ஒன்று நிஜம், நிஜம் என்னை அடிமைபடுத்துகிறது, என்னை நிர்பந்திக்கிறது. நான் செய்யவிருக்கும் அனைத்துக்கும் எதிராய் குறுக்கே வந்து நிற்கிறது. நிஜத்தை இந்த உலகம் மதிக்கிறது அதைதான் உண்மை என்று பிரச்சாரம் செய்கிறது. நிஜத்தை எத்தனை பேர் விரும்புகிறார்கள்  என்று தெரியாது. ஆனால்  அதை கண்டபடி வெறுக்கிறவர்கள் அதிகம். நிஜத்தை ஏற்க முடியாமல் நிஜம் உண்மை என்று நடிக்கிறார்கள். உண்மையில் நிஜத்தை யாவராலும் விரும்பமுடியாது அது அளவற்ற வலிகளையும், ஏமாற்றத்தையும், கொடுமைகளையும் உள்ளடக்கியது.


என்னுடைய இரண்டாம் பரிமாணம் “கனவு”. கனவை என் வாழ்கையில் ஒரு அங்கமாகவே வைத்திருக்கிறேன். அதற்காக தனியே நேரம் ஒதுக்கி க்  கொள்கிறேன். எனக்கு கனவுகள் ரொம்ப பிடிக்கும். இந்த கனவு(கள்) என்னால் உருவாக்கப்படுவைகள், நான் தான் இந்த பரிணாமத்தின் கடவுள். நான் விரும்பும் இடத்திற்கு விரும்பும் மனிதர்களுடன் செல்ல என்னால் முடியும் - முடிந்து போன நிஜங்களை என்னால் இங்கு மறுமுறை எழுத முடியும். நிஜங்களை ஏமாற்ற நான் என்னை எமற்றிகொள்ளும் ஒரு தீய பழக்கம் என்று ஒருநாள் சிறுமூளையின் வழியே நிஜம் என்னை எச்சரித்தது, கேட்டுக்கொண்டேன்.., திருத்திக்கொள்கிறேன்.., என்று சும்மா பொய் சொல்லிவிட்டு நிஜத்தை ஏமாற்றும் வித்தைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

என்னை போன்று கனவு உலகத்தில் காலத்தை கழிப்பவர்கள் நிறைய பேர் உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இதை பற்றி யாரும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் பயம், கூச்சம், பகுத்தறிவு இதுபோன்று நிஜங்களின் காவலர்களுக்கு கட்டுண்டு தன் கனவுகளை இரகசிய பெட்டகமாக வைத்திருப்பார்கள்.போகட்டும் ஒருநாள் வெளியே வரும் அவை.


அழகிய சின்ட்ரெல்லா - 1



நான் அவங்களை நெறைய தடவ பார்த்து இருக்கேன், முதல் தடவ பார்க்கும் போது காதலெல்லாம் வரல, அவங்க கொஞ்சம் அழகாக இருந்தாங்க அவளோதான்  மத்தப்படி சொல்லிகுற மாதரி வேற ஒன்னும் பெருசா இல்ல. காலேஜ் கான்டீன்ல அவங்கள தினம் பார்த்திருக்கேன், எப்ப பார்த்தாலும் கலகல நண்பர்கள் கூட சிரிச்சிட்டு இருப்பாங்க... இப்படியே கான்டீன், ரயில்வே ஸ்டேஷன், காபி ஸ்டால் ஒரு மூணு மாதம் போனுச்சு. அப்ப கூட அவங்க மேல ஏதும் ஆசை  வரல.

இந்த காதல் எப்போ வரும் எப்படி வருமுனு  நம்ம யாருக்குமே தெரியாதுங்க ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்..!! என்ன கொஞ்ச சினிமா தனமா இருக்கா.. கிட்டத்தட்ட எல்லா காதல்களும் சினிமா விட இன்னும் மோசமா இருக்கும்.அமாம்.....

அழகான சிரிப்பு – கோவமான சுளிப்பு – வேடிக்கையான நடப்பு – மென்மையான மழை – சுகமான இசை – மயக்கும் கவிதை – இதுல எதாச்சும் ஒரு  காரணி போதும் காதல் வர.. ஆனா இதுல முக்கால்வாசி சேர்ந்து ஒரே நேரத்தில் வந்துச்சுனா ஒரேயடியா வை தீஸ் கொலைவெறி டி தான்.கல்லூரி கலை விழாவில் இசையுடன் மின்னல் மழையும் சேர்ந்து அந்த மாலை வேளையை ஒரு மாதிரி ரொமாண்டிக்கா ஆக்கிகொன்டிருக்க பின்னணி இசையாய் தாய்  மொழி இல்லையேல் தவிர அந்த ஆங்கிலம் அத்துணை ரம்மியமாக தான் இருந்தது. 



உண்மையா  மிக சில பெண்களுக்கு தான் வெள்ளை நிற ஆடை அழகாக   அமையும், அவங்க அன்னைக்கு ஒரு சாதாரண வெள்ளை சேலை கட்டிருந்தங்க. அப்போதான் தெரிஞ்சுது ஏன் தேவதைகள் வெள்ளை நிற உடையனித்து படங்களில் இருக்கின்றன என்று.. அணிதிருந்த வெள்ளை சேலை மழை தண்ணியில் படாமல் லேசா முந்தியை படித்து இழுத்து குதிகாலால் மெல்ல குதித்து நடந்து வந்ததை பார்த்து எங்கோ உறங்கிகொண்டிருந்த என் மனம் எம்பி தட்டுதடுமாறி அவங்க பின்னாடி “காதல் காதல் “ என கத்திகொண்டே ஓடிற்று. 

பெயர் கூட தெரியாத பெண்களிடம் எப்படி  தான் இந்த காதல்  வந்து தொலைகிறதோ ?

காதல் – கரெக்டா டேபின் (define) பண்ணனும்னா -  அந்த ஒன்று இருண்டு நிமிடம் என் இதயமே நின்னு போச்சு ... மூச்சு விட முடியல்ல. நெஞ்சு மேல அஞ்சு டன் வெயிட் வச்ச மாதிரி  ஒரு தோன்றல். என்ன நடந்துச்சுன்னு தெரியல எங்க இருந்தேன்னு  தெரியல என்னன்னா நினைச்சேன்னு  கூட  இப்போ நியாபகம் இல்ல ஆனா ஒன்னு மட்டும் அன்னைக்கு  ராத்திரி நானே எனக்கு சொல்ல்லிகிடேன் “ கார்த்தி உனக்கு காதல் கல்யாணம்  தான் டா ".


Monday 31 January 2011

LOVE AT FIRST SIGHT அப்படினா என்ன??


“Love at first sight”

இதை நம்புகிறிர்களா????

நான் பார்த்தவரை மேல சொல்லபெற்ற அந்த ஒரு வரி தான் காதல் (நிஜத்திலும்/படங்களிலும்) வர அதிக காரணம்.

எதிர்பார்க்காத ஒரு ஈர்ப்பு எப்படி தோன்றுகிறது....

பள்ளி பருவத்தில் இருந்தே நம் பாட புத்தகத்தில் நம்மோடு பழக ஆரம்பிக்கறது இந்த காதல் , அதாவது காதல் கதைகள், சிறு வயதில் cindrella-sleeping beauty-rapunzel போன்ற fairy tales அப்புறம் கொஞ்சம் முன்னேறி 6,8,10ம் வகுப்பில் தமிழில் ராமாயணம், பாரதியார்-பாரதிதாசன் கவிதைகள் : பிற இலக்கியங்கள் layla – majnu, particularly Juliet capulet-ன் காதல் கதைகள் (இன்னும் எக்கச்சக்க உதாரணம் உண்டு)

ஆனால் காரண காரியங்கள் இன்றி எதுவுமே நடபதில்லை, உலகத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் ஒன்றுகொன்று தொடர்புவுடையது என்று ஒரு மேற்கத்திய சிந்தனை உள்ளது (chaos theory),ஏன் உலகில் உள்ள அனைத்து மதங்களின் சிந்தனையிலும் இது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அப்படி என்றால் மேல சொல்லபெற்ற love at first sight–ம் எதாவது ஒரு விதத்தில் அதை தற்செயலாக அனுபவிக்கும் யாருக்கோ ஒருவருக்கும் அவர்கள் காதல் வயப்பட காரணமாய் இருக்கும் ஒருவருக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கவேண்டும் இல்லையென்றால் முற்றிலும் பேர் ஊர் தெரியாத ஒருவர் மீது காதல் வருவது எப்படி சாத்தியமாகும்???

அபோதிருந்தே ஒரு தேடல் “காதல்” என்றால் என்ன, அதிலும் love at first sight

எப்படி ?? எப்படி ??

அப்போது இருந்து தேட ஆரம்பித்தேன்..

பின் குறிப்பு: விடை தேடி அலைந்த இரவுகளுக்கு இன்னமும் பதில் அளிக்கவில்லை....

Monday 11 October 2010

காற்றில் கவிதை வடிப்பவள்...

பின்னாத தலையில் உள்ள கூந்தல்

காற்றில் கவிதை வரைகிறது....

நீ தலை குளித்துவிட்டு வந்தாய் என

ஊருக்கே தெரியவேண்டுமா என்ன???????