Monday, 31 January 2011

LOVE AT FIRST SIGHT அப்படினா என்ன??


“Love at first sight”

இதை நம்புகிறிர்களா????

நான் பார்த்தவரை மேல சொல்லபெற்ற அந்த ஒரு வரி தான் காதல் (நிஜத்திலும்/படங்களிலும்) வர அதிக காரணம்.

எதிர்பார்க்காத ஒரு ஈர்ப்பு எப்படி தோன்றுகிறது....

பள்ளி பருவத்தில் இருந்தே நம் பாட புத்தகத்தில் நம்மோடு பழக ஆரம்பிக்கறது இந்த காதல் , அதாவது காதல் கதைகள், சிறு வயதில் cindrella-sleeping beauty-rapunzel போன்ற fairy tales அப்புறம் கொஞ்சம் முன்னேறி 6,8,10ம் வகுப்பில் தமிழில் ராமாயணம், பாரதியார்-பாரதிதாசன் கவிதைகள் : பிற இலக்கியங்கள் layla – majnu, particularly Juliet capulet-ன் காதல் கதைகள் (இன்னும் எக்கச்சக்க உதாரணம் உண்டு)

ஆனால் காரண காரியங்கள் இன்றி எதுவுமே நடபதில்லை, உலகத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் ஒன்றுகொன்று தொடர்புவுடையது என்று ஒரு மேற்கத்திய சிந்தனை உள்ளது (chaos theory),ஏன் உலகில் உள்ள அனைத்து மதங்களின் சிந்தனையிலும் இது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அப்படி என்றால் மேல சொல்லபெற்ற love at first sight–ம் எதாவது ஒரு விதத்தில் அதை தற்செயலாக அனுபவிக்கும் யாருக்கோ ஒருவருக்கும் அவர்கள் காதல் வயப்பட காரணமாய் இருக்கும் ஒருவருக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கவேண்டும் இல்லையென்றால் முற்றிலும் பேர் ஊர் தெரியாத ஒருவர் மீது காதல் வருவது எப்படி சாத்தியமாகும்???

அபோதிருந்தே ஒரு தேடல் “காதல்” என்றால் என்ன, அதிலும் love at first sight

எப்படி ?? எப்படி ??

அப்போது இருந்து தேட ஆரம்பித்தேன்..

பின் குறிப்பு: விடை தேடி அலைந்த இரவுகளுக்கு இன்னமும் பதில் அளிக்கவில்லை....

No comments:

Post a Comment