நான்
அவங்களை நெறைய தடவ பார்த்து இருக்கேன், முதல் தடவ பார்க்கும் போது காதலெல்லாம்
வரல, அவங்க கொஞ்சம் அழகாக இருந்தாங்க அவளோதான் மத்தப்படி சொல்லிகுற மாதரி வேற
ஒன்னும் பெருசா இல்ல. காலேஜ் கான்டீன்ல அவங்கள தினம் பார்த்திருக்கேன், எப்ப
பார்த்தாலும் கலகல நண்பர்கள் கூட சிரிச்சிட்டு இருப்பாங்க... இப்படியே கான்டீன், ரயில்வே ஸ்டேஷன், காபி
ஸ்டால் ஒரு மூணு மாதம் போனுச்சு. அப்ப கூட அவங்க மேல ஏதும் ஆசை வரல.
இந்த
காதல் எப்போ வரும் எப்படி வருமுனு நம்ம யாருக்குமே
தெரியாதுங்க ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்..!! என்ன கொஞ்ச சினிமா தனமா
இருக்கா.. கிட்டத்தட்ட எல்லா காதல்களும் சினிமா விட இன்னும் மோசமா இருக்கும்.அமாம்.....
அழகான
சிரிப்பு – கோவமான சுளிப்பு – வேடிக்கையான நடப்பு – மென்மையான மழை – சுகமான இசை –
மயக்கும் கவிதை – இதுல எதாச்சும் ஒரு காரணி போதும் காதல் வர.. ஆனா இதுல
முக்கால்வாசி சேர்ந்து ஒரே நேரத்தில் வந்துச்சுனா ஒரேயடியா வை தீஸ் கொலைவெறி டி
தான்.கல்லூரி கலை விழாவில் இசையுடன் மின்னல் மழையும் சேர்ந்து அந்த மாலை வேளையை ஒரு
மாதிரி ரொமாண்டிக்கா ஆக்கிகொன்டிருக்க பின்னணி இசையாய்
தாய் மொழி இல்லையேல் தவிர அந்த ஆங்கிலம் அத்துணை
ரம்மியமாக தான் இருந்தது.
உண்மையா மிக சில பெண்களுக்கு தான் வெள்ளை நிற ஆடை அழகாக அமையும், அவங்க அன்னைக்கு
ஒரு சாதாரண வெள்ளை சேலை கட்டிருந்தங்க. அப்போதான் தெரிஞ்சுது ஏன் தேவதைகள் வெள்ளை
நிற உடையனித்து படங்களில் இருக்கின்றன என்று.. அணிதிருந்த வெள்ளை சேலை மழை
தண்ணியில் படாமல் லேசா முந்தியை படித்து இழுத்து குதிகாலால் மெல்ல குதித்து நடந்து
வந்ததை பார்த்து எங்கோ உறங்கிகொண்டிருந்த என் மனம் எம்பி தட்டுதடுமாறி அவங்க
பின்னாடி “காதல் காதல் “ என கத்திகொண்டே ஓடிற்று.
பெயர் கூட தெரியாத பெண்களிடம் எப்படி தான் இந்த
காதல் வந்து தொலைகிறதோ ?
காதல்
– கரெக்டா டேபின் (define) பண்ணனும்னா - அந்த ஒன்று இருண்டு நிமிடம் என் இதயமே நின்னு போச்சு ... மூச்சு விட முடியல்ல.
நெஞ்சு மேல அஞ்சு டன் வெயிட் வச்ச மாதிரி ஒரு
தோன்றல். என்ன நடந்துச்சுன்னு தெரியல எங்க இருந்தேன்னு தெரியல என்னன்னா நினைச்சேன்னு கூட இப்போ நியாபகம் இல்ல ஆனா ஒன்னு மட்டும் அன்னைக்கு ராத்திரி நானே எனக்கு
சொல்ல்லிகிடேன் “ கார்த்தி உனக்கு காதல் கல்யாணம்
தான் டா ".

No comments:
Post a Comment