எனது
வாழ்கை இரண்டாக உள்ளது ஒன்று நிஜம், நிஜம் என்னை அடிமைபடுத்துகிறது, என்னை நிர்பந்திக்கிறது. நான் செய்யவிருக்கும் அனைத்துக்கும் எதிராய் குறுக்கே வந்து
நிற்கிறது. நிஜத்தை இந்த உலகம் மதிக்கிறது அதைதான் உண்மை என்று பிரச்சாரம்
செய்கிறது. நிஜத்தை எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்று தெரியாது. ஆனால் அதை கண்டபடி வெறுக்கிறவர்கள் அதிகம். நிஜத்தை ஏற்க முடியாமல் நிஜம் உண்மை என்று நடிக்கிறார்கள். உண்மையில் நிஜத்தை யாவராலும் விரும்பமுடியாது அது அளவற்ற வலிகளையும், ஏமாற்றத்தையும், கொடுமைகளையும் உள்ளடக்கியது.
என்னுடைய இரண்டாம் பரிமாணம் “கனவு”. கனவை என்
வாழ்கையில் ஒரு அங்கமாகவே வைத்திருக்கிறேன். அதற்காக தனியே நேரம் ஒதுக்கி க் கொள்கிறேன். எனக்கு கனவுகள் ரொம்ப பிடிக்கும். இந்த கனவு(கள்) என்னால் உருவாக்கப்படுவைகள், நான் தான் இந்த
பரிணாமத்தின் கடவுள். நான் விரும்பும் இடத்திற்கு விரும்பும் மனிதர்களுடன் செல்ல
என்னால் முடியும் - முடிந்து போன நிஜங்களை என்னால் இங்கு மறுமுறை எழுத முடியும். நிஜங்களை
ஏமாற்ற நான் என்னை எமற்றிகொள்ளும் ஒரு தீய பழக்கம் என்று ஒருநாள் சிறுமூளையின்
வழியே நிஜம் என்னை எச்சரித்தது, கேட்டுக்கொண்டேன்.., திருத்திக்கொள்கிறேன்.., என்று சும்மா
பொய் சொல்லிவிட்டு நிஜத்தை ஏமாற்றும் வித்தைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
என்னை போன்று கனவு உலகத்தில் காலத்தை
கழிப்பவர்கள் நிறைய பேர் உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இதை பற்றி யாரும்
யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் பயம், கூச்சம், பகுத்தறிவு இதுபோன்று
நிஜங்களின் காவலர்களுக்கு கட்டுண்டு தன் கனவுகளை இரகசிய பெட்டகமாக
வைத்திருப்பார்கள்.போகட்டும் ஒருநாள் வெளியே வரும் அவை.

No comments:
Post a Comment